418 I like 20 I do not like
எதிர்பாராமல் நோய், எதிர்பாராமல் கடன், எதிர்பாராத நிகழ்வுகள் யாருக்கு?
நமக்கு நடக்காதவரை எல்லாமே வேடிக்கைதான். என்ன... நம்ம ராமசாமி வீட்டுல நேத்து நடந்தது தெரியுமா? என்ன நடந்திச்சு. கடன்காரன்ங்க பத்துபேர் திமுதிமுன்னு கார் எடுத்துகிட்டு வந்ததுட்டாங்கய்லாம். ஆள் வசமா மாட்டிக் கிட்டார். என் காசை வைச்சிட்டு மறு வேலை பாருன்னு வாசல்ல உட்காந்திட்டாங்களாம்.... ராமசாமியின் துன்பம், அவருக்கு நேர்ந்த அவமரியாதை என்பது நம்மை பொறுத்தவரை ஒரு செய்தி. ராமசாமியின் கம்பீரமான உருவம், அவரின் மிடுக்கு, பெரிய மனிததோரனை நம் மனக்கண்ணில் நிழலாடி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ராமசாமியின் சுயகௌரவத்தை தொட்டுப் பார்த்ததுபோல் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையிலும் வந்து போகலாம். வரும் முன் காப்பதுதானே புத்திசாலித்தனம்.
Video Comments